கோயில் திருவிழா என்றாலே ஆண்களை விட பெண்கள் விரதம் இருப்பது, தீர்த்தம் எடுப்பது, என பக்தியில் அதிக ஈடுபாடுடன் இருப்பார்கள்.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது. சென்ற 25 ந் தேதி பூசாட்டுதலுடன் இக்கோயில் திருவிழா தொடங்கியது. சென்ற 2 ந் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மூலவர் சன்னதியின் முன்புள்ள கொடி மரத்தில் கோவில் பூசாரிகள் சிம்மக்கொடியை ஏற்றினர்கள். இதை தொடர்ந்து பத்தரகாளி அம்மனுக்கு தினமும் அபிேஷகம், சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. நேற்று பாலபிேஷகம் நடந்தது.
ஈரோடு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பெண்கள் மஞ்சள் உடையணித்து பக்தி பரவசத்துடன் ஆடிப்பாடி பால்குடத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், கருங்கல்பாளையத்திலிருந்து காவிரிரோடு, ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, மரப்பாலம், வழியாக கோவிலில் நிறைவு பெற்றது.
இன்று இரவு அக்னிகபாலம் வைத்தல், நேற்று இரவு குண்டம் பற்றவைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை, 11ந் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஈரோடு மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள் உடையில் குண்டம் இறங்கவுள்ளனர்.