








Published on 19/02/2022 | Edited on 19/02/2022
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். அந்தவகையில், சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி, பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி, ராயப்பேட்டை வி.எம். ஆகிய இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
குறிப்பாக ராயப்பேட்டை வி.எம். தெருவில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடியில், ஒரு பெண் கை குழந்தையுடன் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு சென்றார்.