திருச்சி ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை துடைத்தபடி பெண் ஒருவர் திருநாவுக்கரசருக்கு வாக்களிக்க வேண்டாம் என பரப்புரையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு சென்ற பாதசாரிகள் மத்தியில் கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியது.

சாலையில் சென்றுகொண்டிருந்த மக்களை நிறுத்தி அவர்களின் காலணிகளை கழட்டிவிட சொல்லி அவர்களின் காலணிகளை துணியால் துடைத்த நர்மதா என்ற பெண்மணி திருநாவுக்கரசருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அங்குவந்த காங்கிரஸருக்கும் நர்மதாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது.


தகவல் தெரிந்த காவல்துறையினர் நர்மதாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜக மற்றும் தேமுதிக தொண்டர்கள் நர்மதாவை வெளியே விடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண்மணி அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டு விடும் போராட்டம் நடத்தி கைதானவர் என தெரியவந்துள்ளது.