மத்திய அமைச்சர அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து சென்றார். அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி தந்த திமுக கண்ணாடியை பார்த்து குரங்கு பொம்மை என்ன விலை என்று கேட்பதுபோல் அமித்ஷாவின் பேச்சு இருந்ததாக காட்டமான கருத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அரசியல் இல்லாமல் நாடு, மாநிலம், உலகம் உள்ளிட்ட எதுவும் இல்லை. அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுகவில் வழிவழியாக வாரிசு அரசியல் இருந்து வருகிறது. அதிமுகவில் அதுபோல் இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார்கள். திமுகவில் அது சாத்தியமா? துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? அவரது மகனைத்தான் அறிவிப்பார்" என்றார்.