Published on 27/05/2022 | Edited on 27/05/2022
நீலகிரி அருகே யானை முற்றுகையிட்டதால் பள்ளி மாணவிகள் பொதுத்தேர்வுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள ஊர்களை காட்டு யானைகள் முற்றுகையிடுவது வாடிக்கை. ஓவேலி ஆரூற்று பாதை பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றை காட்டு யானை முற்றுகையிட்டது. நேற்று அந்த காட்டு யானை தாக்கி ஆனந்தன் என்பவர் உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியே அச்சத்தில் உறைந்தது. 10 ஆம் வகுப்புக்கு தற்பொழுது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் காட்டு யானை வீட்டு பகுதியை முற்றுகையிட்டதால் அச்சமடைந்த ஓவேலி ஆரூற்று பாதை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகள் பொதுத்தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தேர்வெழுத செல்லும் வகையில் யானையை விரட்டி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.