கேரள மாநிலத்தில் 8 நபர்களைத் தாக்கி கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் கம்பம் நகரில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் வசிக்கும் தெருவிலும் அதனை சுற்றியுள்ள கோவில்கள் மற்றும் மின்வாரிய அலுவலக பகுதிகளிலும் சுற்றித்திரிந்து அவ்வழியாக வந்த 65 வயதுள்ள பால்ராஜ் என்பவரை தாக்கியும் அருகில் இருந்த ஆட்டோவை தாக்கியும் குடியிருப்பு பகுதியின் வெளியே இருந்த பொருட்களை சேதப்படுத்தியதால், பொதுமக்கள் பீதியடைந்து கொண்டு ஓடி வீட்டின் கதவுகளை அடைத்து யாரும் வெளியில் வரவில்லை. இத்தகவல் அறிந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் உடனடியாக யானை தாக்கி காயமுற்ற பால்ராஜ் என்பரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசரப்பிரிவில் சேர்த்து முதலுதவி சிகிச்சை செய்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து யானை இருக்கும் பகுதி அருகே சென்று அங்கிருந்த காவல்துறை வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது தொடர்பாகவும் மீண்டும் யானை நகர்ப்பகுதிக்குள் வராமல் தடுப்பது தொடர்பாகவும் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அரிகொம்பன் யானை நகருக்குள் உலா வருவதைக் கண்டு நகர மக்கள் வீதியில் இருந்து கொண்டு வெளியே வரவே அஞ்சி வருகிறார்கள்.