ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மனைவியின் தலையை இழுத்து உடலை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு கணவன் ஊர்வலமாக சாலையில் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். 28 வயதான முனியப்பன் கேஸ் லாரிகளில் சிலிண்டர்களை ஏற்றியிறக்கும் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிவேதா என்ற 19 வயது இளம் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் நிவேதா பெருந்துறையில் உள்ள தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முனியப்பன் தனது உடை எல்லாம் ரத்தக்கரை படிந்த நிலையில் பெண்ணொருவரை வாகனத்தின் முன் பக்கத்தில் குப்புற படுக்க வைத்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளார். காட்டுவலசு குதியை அருகே சாலை வளைவில் திரும்பியபோது சுவற்றில் மோதி இருசக்கர வாகனம் வாகனத்துடன் தவறி விழுந்துள்ளார் முனியப்பன்.
அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெண்ணின் சடலம் தலை தனியாகவும் உடல் தனியாகவும் கீழே விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து முனியப்பன் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரதாபரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண் முனியப்பன் மனைவி நிவேதா என்பதும், கொலைக்கான காரணமும் விசாரணையில் தெரியவந்தது. திங்கட்கிழமை இரவு பணிக்கு சென்ற முனியப்பன் வேலை சீக்கிரமாக முடிந்து விட்டதால் இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நிவேதா வேறொரு ஆணுடன் தனிமையில் இருப்பதை அறிந்த முனியப்பன் ஆவேசமாகி முனியப்பனை கண்டதும் அந்த ஆண் தப்பி ஓடி விட மனைவியுடன் முனியப்பனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு நேராக தாய் வீட்டுக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை எடுத்து இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் தானே கொண்டு தாய் வீட்டில் விடுவதாக முனியப்பன் கூறியுள்ளான். நிவேதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று காட்டு வலசு என்ற பகுதியில் அடித்து வீழ்த்தினான். இந்தநிலையில் அதிகாலையில் பெருந்துறை பகுதியில் சாலையை ஒட்டிய வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்ததால் சிக்கினான் முனியப்பன்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.