Skip to main content

ஜான் சத்யன் நீதிபதியாக்கப்படாதது ஏன்? - கொலீஜியம் அதிருப்தி

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 Why was John Satyan not made a Justice?-Collegium Discontent

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜான் சத்யன் நியமனத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது பெரும் கவலைக்குரியது என கொலீஜியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

வழக்கறிஞர் ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.  இருப்பினும் அவர் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. இதற்கு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக டிவிட்டரில் ஜான் சத்யன் வெளியிட்ட பதிவை காட்டி அவரது நியமனத்தை அரசு நிறுத்தி வைத்திருப்பதாக பேச்சுக்கள் எழுந்தது. அந்தப் பதிவில் பிரதமர் குறித்து விமர்சனம் இருந்ததே காரணம் எனவும் கூறப்பட்டது.

 

வழக்கறிஞராக இருப்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்து அவருடைய பணியில் பிரதிபலிக்காது என சுட்டிக்காட்டி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கொலீஜியம் மீண்டும் ஜான் சத்யனை நீதிபதியாக்க வலியுறுத்தி இருந்தது. அதுவும் ஏற்கப்படாத நிலையில் அவருக்கு பின்னால் பரிந்துரை செய்யப்பட்ட விக்டோரியா கவுரி உள்ளிட்டோர் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளனர்.

 

இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நான்கு நீதிபதிகளை நியமிக்க நேற்று நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நான்கு பரிந்துரைகளுடன் ஜான் சத்யன் தொடர்பாகத் தனி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் ஏற்கனவே கொலீஜியம் பரிந்துரைத்த ஜான் சத்யன் உள்ளிட்ட நியமனங்களை நிறுத்தி வைத்திருப்பது பெரும் கவலைக்குரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கறிஞர் ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளது கொலீஜியம். 


 

சார்ந்த செய்திகள்