Skip to main content

காதலன் காந்தியிடம் இருந்து விலகியது  ஏன்?  நிலானி பரபரப்பு விளக்கம்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nilani

 

காதலன் காந்திலலித்குமார் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்றும், அவருடமிருந்து விலகியது குறித்தும்,  காந்தியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் அளித்துள்ளார்.

 

தென்றல், தாமரை, பிரியமானவள் போன்ற சின்னத்திரை தொடர்களிலும்,  காதலும் கடந்து போகும், தெரு நாய்கள், நெருப்புடா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை நிலானி.  இவரது காதலர் காந்தி லலித்குமார்.  உதவி இயக்குநரான இவர் திருவண்ணாமலையைச்சேர்ந்தவர்.

 

ni

 

காதலியான நிலானி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி,  நிலானி நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள், காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நிலானி, மயிலாப்பூர் காவல்நிலையத்தில், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்துள்ளார். நிலானி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

 

nakai


 
இந்த சூழ்நிலையில்,  காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் நிலானியுடன் இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.   காந்தியின் தற்கொலைக்கு நிலானிதான் காரணம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

இதனால் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிலானி புகார் செய்தார்.  அந்த புகார் மனுவில்,  ‘’காந்தி லலித்குமார் என் காதலர்.  அவர் தற்கொலைக்கு நான் காரணமில்லை.   நான் அவரை திருமணம் செய்ய நினைத்திருந்தேன்.  ஆனால் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டிருந்தார்.   தொடர்ந்து என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியதால் அவரிடம் இருந்து விலகினேன்.   

 

நானும் காந்தியும் சேர்ந்திருப்பதுபோல் உள்ள படங்களை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர்.   சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழைய சம்பவங்களை கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சனை... பேட்டியின் போது நடிகை கண்ணீர்...

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, போலீசார் பற்றி பேசி போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் நிலானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரணடு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். 


 

 

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி லலித்குமார் என்ற திரைப்படய உதவி இயக்குநருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து இறந்தார். இதையடுத்து நிலானி தனது குழந்தைகளுடன் போரூர் அருகே குடியேறினார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். 

 

nilani serial actress


 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

பழைய சம்பவங்கள் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளேன். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2 குழந்தைகளோடு நான் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு வந்தேன். என் வாழ்வில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்துள்ளேன்.
 

என் நிலையை அறிந்து, சமூகவலைதளமான ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமானார் மஞ்சுநாதன். உதவி செய்வதாக கூறினார். வேலூரை சேர்ந்த மஞ்சுநாதனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது கஷ்ட நிலையை பார்த்து அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார். வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்தார். அடிக்கடி செல்போனில் பேசுவார். என்னை நேரடியாகவும் வந்து சந்தித்தார்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் அதற்கு சம்மதித்தேன். எனினும் அவரது பெற்றோரின் சம்மதம் பெற்றுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் தெரிவித்து இருந்தேன். அவர் திருமணம் ஆகாதவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று பின்னர் தெரியவந்தது.
 

இதனால் அவரோடு பழகுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனக்கு அவர் ஒரு செல்போன் வாங்கி தந்தார். திடீரென எனது வீட்டிற்கு வந்த அவர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த செல்போனில் இருந்த எனது படங்களை தவறாக பயன்படுத்துவேன் என்று கூறி மிரட்டினார்.


 

 

எனது குளியல் அறையில் கேமரா பொருத்தி என்னை படம் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறினார். அதனை இணையதளத்தில் வெளியிடுவேன்,  எனது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இந்த நேரத்தில்கூட என்னை செல்போனில் அழைத்து மிரட்டினார்.
 

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் புகார் கொடுக்க வந்தேன் என கண்ணீருடன் பேட்டி அளித்தார். 

 

Next Story

நிலானி மீது வழக்கு பதிவு

Published on 22/09/2018 | Edited on 22/09/2018


 

ni

 

சென்னை ஆலப்பாக்கத்தில் சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 20ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து  அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலானி மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 கடந்த வாரம் நிலானியின் காதலர் காந்தி லலித்குமார் சென்னை கே.கே.நகரில் நடுரோட்டில் தற்கொலை செய்துகொண்டார்.  நிலானி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.     இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.   
 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான நிலானி,   காந்தி்யின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை.   அவரை திருமணம் செய்வதாகத்தான் இருந்தேன்.  ஆனால், மதுப்பழக்கத்தினால் என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டே இருந்தார்.  இதனால் மனம் வெறுத்து அவரிடம் இருந்து விலகினேன் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, இதையே செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.   மேலும்,  காந்தியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்பி என் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்குமின்றனர் என்று குமுறினார்.  

 
காந்தி தற்கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,   நிலானி தனது வீட்டில்  விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது மதுரவாயல் போலீஸ்.