நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிடிவின் மூன்றாவது பொதுக்கூட்டம் தேனியில் நடைபெறவுள்ளது. இதற்கான இடம் போடி விளக்கு அருகே தேர்வு செய்யபட்டுள்ளது. அந்த இடத்தில் மேடை அமைப்பவதற்காக மூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிடிவின் தீவிர ஆதரவாளர்ரான ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு மூர்த்தகால் நட்டார். அவருடன் கம்பம் ஜக்கையன் உள்பட டிடிவி ஆதரவாளர்கள் பெரும் திரலாகவே கலந்துகொண்டனர்.
இந்த மூர்த்தகால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தங்கதமிழ்ச்செல்வனோ, ஜெ மரணத்தில் நீதி விசாரணை நடத்தினால் தான் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இது எங்களுக்கு சாதகமானது தான். அதுபோல் தர்மத்துக்கும் ஓபிஎஸ்க்கும் சம்மந்தம் இல்லை. ஓபிஎஸ்க்கு தர்மத்தை பற்றி பேச அருகதையில்லை.
சின்னம்மா சசிகலா குடும்பம் இல்லை என்றால் ஓபிஎஸ் இல்லை. அதை மறந்து பேசிவருகிறார். ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை முன்கூட்டியே வெளியிட்டு இருக்கலாம். அதை பற்றி சின்னம்மாவிடம் நாங்கள் கேட்டதற்கு வீடியோவை வெளியிட்டால் நட்புக்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் என்றும் நட்புக்காக பழிச்சொல்லை தானே ஏற்றுக்கொள்வதாகவும் சின்னம்மா தெரிவித்தார். அதுனால தான் வெளியிடவில்லை. தற்பொழுது நீதி விசாரணையின் போது வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்படும். அதன் மூலம் நாங்கள் நூறு சதவீதம் நல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று கூறினார்.
சக்தி