Skip to main content

காங்கிரஸ் வேட்பாளர் யார் ?- விரக்தியில் கூட்டணி கட்சியினர்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

தமிழகம்-புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என 40க்கு 40 என திமுக கூட்டணி அறிவித்துள்ளது. ஆளும்கட்சிக்கு முன்பாக வேட்பாளர் பட்டியல் அறிவித்தது திமுக. அடுத்தடுத்து அதன் கூட்டணி கட்சிகளாக உள்ள இடதுசாரிகள், விடுதலைசிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு கட்சி போன்றவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. சில தொகுதிகளில் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு படுவேகமாக களத்தில் இறங்கியுள்ளது.

 

CONGRESS

 

ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தி முடித்துவிட்டு பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளது. அதிலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மார்ச் 25 மற்றும் 26 ந்தேதி மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் முடிவுறள்ளது.

 

 

எப்போது வேட்பாளரை அறிவிப்பது, அவரை கட்சியினரிடம் அறிமுகப்படுத்துவது, செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, பிரச்சாரம் செய்வது என கவலையில் உள்ளனர். இந்த கவலை காங்கிரஸ் கட்சியினரை விட அந்த கட்சி கூட்டணி அமைத்துள்ள திமுகவினரிடம் கூடுதலாக உள்ளது.

 

இதப்பற்றி ஆரணி தொகுதியை சேர்ந்த திமுகவினர் நம்மிடம் பேசும்போது, நீண்ட பல வருடங்களாக இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்று எம்.பியாக இருந்துள்ளார்கள். இந்த முறை உதயசூரியனே நிற்க வேண்டும் என முயற்சி செய்தும், காங்கிரஸ் பிடிவாதமாக இந்த தொகுதி வேண்டும்மென கேட்டு வாங்கியது. இது மட்டும்மல்ல இதுபோல் இன்னும் 8 தொகுதிகளை வாங்கியுள்ளது. ஆனால், இதுவரை வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி அறிவிக்கவில்லை.

 

 

இந்த ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தொகுதியில் உள்ள கட்சியினர், கூட்டணி கட்சியினரை சந்தித்துவிட்டார். அடுத்து பிரச்சாரத்துக்கு கிளம்பவுள்ளார். ஆனால் இன்னமும் வேட்பாளரையே அறிவிக்காமல் காங்கிரஸ் உள்ளது, இவர்களை நாங்க தான் சமந்துக்கிட்டு போகனும், நாங்க சொல்றபடியும் கேட்கமாட்டாங்க, தோத்துட்டா மட்டும் எங்களை குறை சொல்வாங்க.

 

 

எதிரணிக்கு சவாலா தேர்தல் வேலை பார்த்தாதானே ஜெயிக்க முடியும். வேட்பாளரை அறிவிக்காமல் வைத்திருந்தால் என்ன செய்யறது என புலம்பினார்கள். திமுகவை போலவே காங்கிரஸ் உட்பட அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் புலம்பினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்