Published on 03/10/2019 | Edited on 03/10/2019
தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதில் தர்ஷன் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது நிலவரப்படி முகேன் முதலிடத்திலும், லாஸ்லியா இரண்டாவது இடத்திலும், சாண்டி மூன்றாவது இடத்திலும், கடைசி இடத்தில் ஷெரினும் உள்ளனர். பிக் பாஸ் போட்டியில் கடைசி இரண்டு சீசனிலும் நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்ற போட்டியாளர் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றது இல்லை. இந்த முறை அதற்கு மாற்றாக முகேன் டைட்டில் வின்னர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது நிலவரப்படி இருக்கும் வாக்குகளின் படி தொடர்ந்தால் முகேன் டைட்டில் வின்னர் பட்டமும், அவருக்கு அடுத்து ரன்னராக லாஸ்லியா வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறிவருகின்றனர்.