Skip to main content

தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற அதிமுக வேட்பாளர் இவர் தான்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், கடந்த, 2016 ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, குறைந்த ஓட்டுக்களையே பெற்று, தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்களில் மிக குறைவான  ஓட்டுகளை  வாங்கி தம்பிதுரை சரிவை சந்தித்துள்ளார்.

15- வது மக்களவை  தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் எம். தம்பிதுரை திமுகவின் கே.சி. பழனிச்சாமியை விட 47,254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

16- வது மக்களவை  தேர்தலில் திமுகவின் சின்னசாமி 3,45,475 எம். தம்பிதுரை அதிமுக 5,40,722 வாங்கி 1,95,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

17- வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 4.20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை தோல்வி அடைந்துள்ளார்.

 

SENTHIL BALAJI

 

 

கரூர் மக்களவை தொகுதியானது கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடச்சந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டசபை தொகுதிகளை  உள்ளடக்கியது. கடந்த 2016 ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளையும்  கைப்பற்றியது. 

 

அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 81 ஆயிரத்து, 936 ஓட்டுகள் கிடைத்தன. தற்போது 48 ஆயிரத்து 616 ஓட்டுகளாக சரிந்தது. 

 

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கீதா 83 ஆயிரத்து 977 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 44 ஆயிரத்து 315 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

 

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி 88 ஆயிரத்து 68 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 37 ஆயிரத்து 518 ஓட்டுக்கள் கிடைத்தன. 

 

வேடச்சந்தூரில் பரமசிவம் 97 ஆயிரத்து 555 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு, 55 ஆயிரத்து, 258 ஓட்டுகள் கிடைத்தன. 

 

விராலி மலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் 84 ஆயிரத்து  701 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 40 ஆயிரத்து 104 ஓட்டுகள் கிடைத்தன. 

 

JOTHIMANI

 

 

மணப்பாறை தொகுதியில் சந்திரசேகர் 91 ஆயிரத்து 399 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தம்பிதுரைக்கு  48 ஆயிரத்து 644 ஓட்டுகள் கிடைத்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில் பா.ம.க- தே.மு.தி.க கூட்டணி , பா.ஜக கட்சி தனி அணியாக போட்டியிட்டன. 

 

இந்த கட்சிகள் அனைத்தும் தற்போது கூட்டணியில் இருந்தும், அ.தி.மு.கவிற்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கவில்லை. கரூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கைவசம் இருந்தும், கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளைக் கூட பெற முடியாமல் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றும் கடைசியில் இந்த முறை செந்தில்பாலாஜி- ஜோதிமணியின் கூட்டு முயற்சியில் தோல்வியின் கடைசி இடத்திற்கே தம்பிதுரை  சென்று விட்டார். வாழ வந்த ஊரில் இருந்து தம்பிதுரையை பிறந்து ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் கரூர் மக்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்