கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிதம்பரம் வட்டம் குழு சார்பில் எங்கே என் வேலை? எனக் கேட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் தலைவர் ரெஜிஸ்குமார், மாவட்டத் தலைவர் லெனின், மாவட்ட துணைத்தலைவர் ஆழ்வார், புவனகிரி ஒன்றிய செயலாளர் சதீஷ், பொருளாளர் ஸ்டாலின், கீரை பாளையம் ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கஞ்சித்தொட்டி என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை கொடு அல்லது அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய், மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கொண்டு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினார்கள்.
மேலும் ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை என்று தேர்தல் அறிக்கையில் முழங்கிய மோடி இன்று வரை இளைஞர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.