இந்தியா முழுவதும் ஒரே ஒரு அவசர உதவி எண் 112 மூலம் காவல்துறை , ஆம்புலன்ஸ் , தீயணைப்புத்துறை , பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் இனி ஒரே ஒரு மூன்று இலக்க "112 " அவசர கால இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம். மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த இந்த திட்டத்தில் "இமாச்சல் பிரதேசம்" மாநிலம் முதன் முதலாக இணைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசு "112" அவசர கால உதவி எண் சேவையை நடைமுறைப்படுத்தியது. இதில் தமிழகம் , கேரளா , புதுச்சேரி உள்ளிட்ட 16 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அவசர உதவிக்கு (Single Emergency Helpline Number) ஒரே தொலைபேசி எண் 112 என்ற திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன் படி அவசர கால உதவி எண்களாக இருந்த (காவல்துறை -100, தீயணைப்பு துறை - 101, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவை - 108 , பெண்களின் பாதுகாப்பிற்கு - 1090 ) போன்ற எண்களை தொடர்பு கொண்டோம். இவை அனைத்தும் ஒரே எண்ணாக (Emergency Response Support System) (Single Emergency Number Launched in India) " 112" மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இனி அவசர சேவை உதவிக்கு அனைத்து வகையான துறைக்கும் இலவச தொலைபேசி எண் "112" மட்டுமே. இதன் மூலம் தமிழக மக்கள் அனைவரும் "112"என்ற எண்ணை மறவாமல் தேவைப்படும் பட்சத்தில் அரசிடம் இருந்து உதவிகளை நாடலாம். இந்த தொலைபேசி எண்ணிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது முற்றிலும் இலவசமானது. இதற்கான மொபைல் ஆப் (Mobile Application) கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது.
இதனை பயன்படுத்தியும் எளிதாக அவசர கால உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த ஆப் பெயர் "112 India " ஆகும் . இந்திய அரசு கொண்டு வந்த நடைமுறை உலகில் பல்வேறு நாடுகளிலும் முன்கூட்டியே செயல்படுத்தி வருகிறது. புதிய அவசர கால உதவி எண்கள் தொடர்பாக மக்கள் பயன்படுத்தும் சாலைகள் , பேருந்து நிலையங்கள் , மருத்துவ மனைகள் , ரயில் மற்றும் விமான நிலையங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும். இதன் மூலம் மக்களிடையே எளிதில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிராமங்கள் தோறும் சென்று அவசர உதவி எண் "112" பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
பி.சந்தோஷ் , சேலம்.