Skip to main content

சென்னை: எங்கெல்லாம் எவ்வளவு மழை; புள்ளி விவரம்!

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Where and how much rain; Statistical description

 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

 

சென்னையில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை தொடர்வதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

 

இந்த மழை 10 மணிவரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஜூன் மாதம் என்பது மழை பொழியும் மாதமாக இல்லாத காரணத்தால் அம்மாதத்தில் மொத்தமாகவே 50 முதல் 60 மிமீ மழையே சராசரியாக பொழிந்துள்ளது. 

 

ஆனால் இன்று தென் சென்னை பகுதிகளில் மட்டும் 150 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 137.6 மிமீ மழை பொழிந்துள்ளது. தரமணியில் 117.0 மிமீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 109.5 மிமீ மழையும், ஜமீர் கொரட்டூரில் 84 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் பூந்தமல்லியில் 74 மிமீ மழையும் நந்தனத்தில் 117.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம் 82.0 மிமீ, நுங்கம்பாக்கம் 67.4 மிமீ என மழை பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் 50 மிமீ மழையும் காஞ்சிபுரத்தில் 79 மிமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்