தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அடுத்தாண்டு மார்ச் 13- ஆம் தேதி 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். அடுத்தாண்டு மார்ச் மாதம் 14- ஆம் தேதி 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். அடுத்தாண்டு ஏப்ரல் 3- ஆம் தேதி அன்று 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்" என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 23- ஆம் தேதி +1, +2- க்கும், செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பர் 16- ஆம் தேதி +1, +2- வுக்கும், டிசம்பர் 19- ஆம் தேதி அன்று 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23- ஆம் தேதி முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் 2- ஆம் தேதி அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.