
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அரசு பணிக்குத் தேர்வு நடத்தப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் சோர்வடைந்திருந்தனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் அளவு கட்டுக்குள் இருப்பதால் விரைவில் டி.என்.பிஎஸ்.சி. தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில வாரங்களாக எழுந்துவருகிறது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக நாளை (22.09.2021) ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் தேர்வுகள் தொடங்கும் தேதி, எந்த வகையான தேர்வுகள் முதலில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாக வாய்ப்பு உருவாகியுள்ளது. முதற்கட்டமாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதுவரை டிஎன்பிஎஸ்சி, 38 தேர்வுகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.