
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குநர் அமீர், பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கதால் கருத்துரிமையை பறிக்கும் சமீபத்திய கைதுகளை நீதிமன்றம் ஏற்காமல், நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும் என அமீர் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் தொலைக்காட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குநர் அமீர் மீது, நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் அமீர் மீது வழக்கு போடப்பட்டது. இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி
நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுபப்பட்டதை அடுத்து, இன்று பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் அமீர் விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகழ்வில் கலந்து கொண்ட நோக்கம் , என் தரப்பில் பேசப்பட்டது மற்றும் எதிர் தரப்பில் பேசியது குறித்து காவல் துறையிடம் விளக்கம் அளித்ததாகவும், நிகழ்ச்சியின் போது என்னை தாக்க வந்தவர்கள் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விவாதத்தில் அமீர் பேசியதில் என்ன தவறு உள்ளது என இன்று முன் ஜாமின் வழங்கிய நீதிபதியும் கேட்டு இருக்கிறார் என சுட்டிக்காட்டிய அமீர் தன் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறினார்.
சமீபத்திய அனைத்து கைதும் , கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் , இவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவித்தார். மேலும் நீதி மன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான் என்றும் அவர் கூறினார்.