Skip to main content

விரைவுப் பேருந்துகள் இரவு எத்தனை மணி வரை இயக்கப்படும்..? - அரசு விளக்கம்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

jk

 

தமிழகத்தில் நாளை (20.04.2021) முதல் அமல்படுத்தப்படும் இரவுநேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பகல் நேரத்தில் கூட பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால், பகல் நேரங்களில் பேருந்துகளில் செல்பவர்கள் பாதிக்கப்பட வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் பொதுமக்களுக்கு இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், நாளை முதல் அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், காலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்