Published on 13/07/2022 | Edited on 13/07/2022

தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கேரளா மற்றும் கர்நாடகா சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் மரம் சாய்ந்து விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளா செல்லக்கூடிய நான்கு சாலைகள், கர்நாடகா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் கூடலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.