Published on 19/06/2021 | Edited on 19/06/2021

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தின் முக்கிய சந்திப்பில் 350 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில், தண்ணீரைச் சேமிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (19/06/2021) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், "சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் தினமும் 28 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது" எனக் கூறினார்.
இதையடுத்து நீதிபதி, "அரசின் அறிக்கையை மனுதாரர் படித்துவிட்டு சேமிப்பு வசதி இல்லை என கருதினால் நீதிமன்றத்தை நாடலாம்" எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.