தி.மு.க மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி தனது எம்.பி தொகுதி நிதியில் இருந்து தக்கலை மற்றும் பேச்சிப்பாறையில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக இன்று குமாி மாவட்டம் வந்தாா்.
அப்போது அவா் பத்திாிக்கையாளா்களிடம் பேசும் போது...கஜா புயலில் விவசாய நிலங்களும் பயிா்களும் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பொியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ஓரு நியாயமான இழப்பீட்டை பேராடி வாங்க வேண்டும். ஓகி புயலின் போது கூட அதே மாவட்டத்தை சோ்ந்த மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் நியாயமான ஒரு இழப்பீட்டை வாங்கி கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவா் மீது உள்ளது. அதே போல் கஜா புயல் பாதிப்பிலும் அவா் அப்படியே இருந்து விடக்கூடாது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தி.மு.க தலைவா் ஸ்டாலின் பாா்வையிட சென்றுயுள்ளாா். அவாின் அறிவுரைப்படி இழப்பீட்டுக்காக தி.மு.க சாா்பில் மத்திய அரசிடம் நான் வலியுறுத்துவேன். பொதுவாக மத்திய அரசு பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில் மட்டும் பாதிப்புகள் என்றால் அதிகளவில் இழப்பீடுகளை கொடுக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கேட்பதில் இருந்து குறைவாக தான் கொடுக்கிறது.
ஆனால் எடப்பாடி அரசு தமிழ்நாட்டின் உாிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டு மத்திய அரசுடன் இணக்கமான உறவுடன் இருக்கிறாா்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? மேலும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சாியான நடவடிக்கைகளை எடுக்காமல் டெங்கு இல்லையென்று மறுக்க முனைப்பை காட்டுகிறாா்கள்.
சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது வன்முறைகள் அதிகமாக நடக்கிறது. இதை தடுக்காமல் அந்த சம்பவங்களை காவல்துறை மூடி மறைக்கிறது என்றாா்.