தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,650 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இரு வாய்க்கால்களிலும் 120 நாட்களுக்கு மொத்தம் 70 கனஅடி நீர் திறப்பதால் 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் அணைக்கட்டின் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. எல்லீஸ் வாய்க்கால் அணைக்கட்டிலிருந்து நீர் அதிகமாகக் கசிவதால் அணை பலவீனமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.