Skip to main content

தண்ணீர் கேன்களின் வடிவமைப்பை மாற்றியமைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

பெண்கள் எளிதாக தண்ணீர் கேன்களை கையாளும் வகையில், கேன்களின் வடிவமைப்பை மாற்றியமைக்கவும், அதற்கான விதிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், மனுதாரர் விரும்பும் வகையில் உத்தரவிட நீதிமன்றம் வணிக வளாகமல்ல என்று கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையிலும்,  விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தீபா ஸ்ரீ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்கள் பெண்களால் கையாள முடியவில்லை என்றும் அவற்றைச் சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

WATER CANNED 20 LITER SHAPE APPEAL WOMEN CASE IS DISPOSED IN CHENNAI HIGH COURT

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல எனவும், மனுதாரர்களின் இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க தபால் நிலையமும் அல்ல எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 

சார்ந்த செய்திகள்