Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; முழுவீச்சில் வாக்குப்பதிவு

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

Voting for Erode east constituency by-election has begun

 

தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். 

 

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

 

இந்த நிலையில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்