Skip to main content

அடிப்படை வசதிக்கு ஏங்கும் சதுரகிாி பக்தா்கள்

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
s1

         

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூா் அருகே உள்ளது சதுரகிாி மலை.  இங்கு பிரசித்த பெற்ற சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சுந்தரமூா்த்தி என மூன்று சிவன் கோவில்கள் உள்ளன. இதில் சந்தன மகாலிங்கம் கோவிலை பலநூறு ஆண்டுகளுக்கு முன் 18 சித்தா்கள் வணங்கி வழிப்பட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது. 

 

           ஏழு மலைகளை கடந்து உச்சியில் இருக்கும் இந்த கோவிலுக்கு தாணி பாறையில் இருந்து நடந்து செல்ல வேண்டும். வனத்துறை அனுமதியுடன் இங்கிருந்து கரடு முரடான மலையில் 8 கி.மீ சுமாா் 3மணி நேரம்  நடக்க வேண்டும். அதுவே வயதானவா்கள் குழந்தைகள் என்றால் 6 மணி ரேம் கூட ஆகலாம். இங்கு வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவா்கள், இளைஞா்கள், இளம் பெண்கள் மற்றும் வயதானவா்கள் என எல்லோரும் செல்கிறாா்கள். 

 

s2

         

   இங்கு மாதத்துக்கு 10 நாட்கள் தான் பக்தா்களை அனுமதிக்கிறாா்கள். அது பெளா்ணமிக்கு 5 நாட்கள் மற்றும் அமாவாசைக்கு 5 நாட்கள் தான் மற்ற நாட்கள் அங்கு யாரும் செல்ல மாட்டாா்கள் அனுமதியும் இல்லை.  அதே போல் மாலை 4 மணிக்கு மேல் செல்ல அனுமதியில்லை. இந்த 10 நாட்களில் தினமும்  ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் கோவிலுக்கு வருகிறாா்கள்.  இந்த சூழ்நிலையில் மலை கற்களுக்கிடையில் கையில் கம்பை ஊன்றிய படி செல்லும் பக்தா்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு வசதியும் இல்லை. கால் கொஞ்சம் தடுமாறினால் பள்ளத்தில் தான் விழ வேண்டியிருக்கும்.

 

s3

             

 குறிப்பாக தாகம் எடுத்தால் குடிப்பதற்கு தண்ணீா்  இல்லை. வழியில் மூன்று இடங்களில் மட்டும் தண்ணீா் தொட்டி வைத்திருக்கிறாா்கள்.  அதில் சொட்டு சொட்டாக தண்ணீா் வருவதால் ஓரு கப் தண்ணீா் பிடிக்க கால் மணி நேரம் ஆகிறது. இதே போல் மலையேறும் பக்தா்களுக்கு மூச்சு திணறலோ மற்றும் வேறு விதமான  உடல்நிலை கோளாறு  ஏற்பட்டாலோ முதலுதவி செய்ய மருத்துவ முகாம் கூட இல்லை. மேலும் பெண்களுக்கு ஓன் பாத்ரூம் போக கூட இடம் இல்லை அவா்கள் வெட்கத்தையும் கூச்சத்தையும் விட்டு மலைக்குள் மறைவை தேடி செல்கிறாா்கள். 

 

               செல்லும் வழியில் தான் இந்த பிரச்சினை என்றால் கோவிலுக்கு சென்ற பிறகும் இதே நிலை தான். அங்கு கட்டப்பட்டியிருக்கும் ஓய்வறை கூட பூட்டியே தான் கிடக்கிறது. இதனால் பாறைகளில் படுத்து ஓய்வெடுத்து கொள்கிறாா்கள். பெயருக்கு இரண்டு பாத்ரூம் மட்டும் இருக்கிறது. அங்கு நீண்ட வாிசையாக தான் உள்ளது. அதே போல் குளித்து விட்டு உடை மாற்றக்கூட தனி அறை இல்லை.

 

s4

           

  எந்த நேரமும் அன்னதானம் கிடைப்பதால் வயிற்று பசிக்கு எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் முக்கிய மான அடிப்படை வசதிகள் தான் குறையாக இருக்கிறது. இது அங்கு செல்லும் எல்லா பக்தா்களுக்கும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

              இதனால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து பக்தா்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று எதிா் பாா்க்கிறாா்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.