Skip to main content

அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டம்!  

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
co

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில்,  சுற்றுவட்டார பகுதியில் இருந்து,  சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி உள்ளிட்ட வெகு தொலைவில் இருந்து படிக்கும் மாணவர்கள், கல்லூரி அருகில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் குடிநீர், கழிப்பறை,  உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். 

 

co


இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


இந்த ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும்,  மாணவர்களுக்கு பாதுகாப்பு  வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.  மேலும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக மாணவர்களை, ஒன்று திரட்டி, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக  அறிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்