Skip to main content

விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம்! 

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
v

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அனைத்து துறைகளிலும் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒரே பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் பீங்கான் தொழில் நுட்ப கல்லூரி விருத்தாசலத்தில் உள்ளது. மேலும் கேரளா மற்றும் தென் மாவட்டங்களை சென்னையோடு இணக்கும் முக்கிய ரயில்வே நிலைய சந்திப்பு, நான்கு தாலுக்கா விவசாயிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் பெரிய அளவிலான ஒழுங்கு முறை விற்பனை கூடம், முந்திரி, வேர்க்கடலைகளுக்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம்,  மின் துறை, கல்வி துறை என மாவட்ட அளவிலான பல்வேறு  துறை அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளதாலும்,   மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான வேப்பூர், சிறுபாக்கம், மங்களூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து மாவட்ட தலைநகரான கடலூர் செல்ல அதிக நேரம் கடக்க வேண்டியுள்ளதாலும் இப்பகுதிகளின் மையப்பகுதியாக உள்ள விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   அத்துடன்  அதிக வருவாய் ஈட்டும் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவித்தால், வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், கிராமங்களின் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் என அனைத்து துறையும் உயர்வு பெறும் என்பதால் தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

 

v

 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களை ஐந்தாக பிரித்து விருத்தாசலத்தை மைய இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் பாலக்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர்,  அனைத்து கட்சியினர், தன்னார்வலர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர்  கலந்து கொண்டு விருத்தாசலம் மாவட்டம் அமைக்க கோரியும், விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பிரித்து  கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன்   

 

ஆர்ப்பாட்டத்தின் போது  விருத்தாசலம், நெய்வேலி, திருமுட்டம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,  விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை பிரித்து  கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர்.    மேலும்  விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

Next Story

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் விருதாச்சலத்தில் கைது

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

 Famous Chennai-based rowdy arrested at gunpoint in Virudachalam

 

சென்னை முகப்பேர், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் ராஜா. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பராக டேனியல் ராஜா இருந்துள்ளார். விஷ்வாவுடன் சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரான டேனியல் ராஜா போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

 

தொடர்ந்து குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்து உத்தரவிட்டது.  தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் டேனியல் ராஜாவை தேடி வந்தனர். திருமங்கலம் சரக உதவியாளர் வரதராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையால் தேடப்பட்டு வந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பதுங்கி இருந்த டேனியல் ராஜாவை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் நொளம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.