மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், முதலில் வழக்கறிஞர் மகாலிங்கம் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். அதன்பிறகு, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
இன்று நம்மைத் தொடர்பு கொண்ட வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் “நிர்மலாதேவி விவகாரத்தில் புதைந்துள்ள உண்மைகளை முதலில் வெளிக்கொண்டு வந்தது நக்கீரன்தான். அதனால், முதலில் நக்கீரனிடம் இதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நிர்மலாதேவி வழக்கிலிருந்து நான் விலகுகிறேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து, நிர்மலாதேவி என்னிடம் கூறிய அத்தனை விஷயங்களையும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்போகிறேன்.” என்றார்.
பசும்பொன்பாண்டியன் என்ன காரணத்திற்காக வழக்கிலிருந்து விலகுகிறாரோ? எதைச்சொல்லி அதிரடி கிளப்பப் போகிறாரோ?