தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கீழபள்ளி வாசல் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் முதற்கட்டமாக 1,00000 ரூபாய் மதிப்பிலான ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருட்களை 300 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யத் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
அந்தப் பொருட்களை விதவை பெண்கள், கனவனால் கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், தினக் கூலிகள் ஆகியோருக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாக அந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
அதோடு மற்றப்பகுதிகளிலும் செல்வந்தர்கள் தனது ரமலான் மாதத்திற்கு கொடுப்பதற்காக ஒதுக்கி வைத்துள்ள ஜக்காத்தொகை மற்றும் சேமிப்பை, கொரோனாவிற்கான இன்றைய சூழலிலேயே ஏழை குடும்பத்திற்கு உதவுங்கள். நமது வீடுகளில் உள்ள சிறு குழந்தைகள் வயது முதியோர்கள் இருப்பதைப்போல அருகில் உள்ள பல ஏழை குடும்பங்களிலும் அன்றாடம் காட்சிகள் தினக்கூலி பெறுபவர்கள் வீட்டிலும் குழந்தைகளும் முதியவர்களும் இருப்பார்கள். அந்தந்த கிராமங்களில் உதவிடவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.