Skip to main content

விருத்தாசலம் கோட்டாசியர் அலுவலகம்; மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

Published on 08/08/2017 | Edited on 08/08/2017

விருத்தாசலம் கோட்டாசியர் அலுவலகம்;
 மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

விருத்தாசலம் சுற்றுவட்டார கிராமங்களான புதுக்கூரைபேட்டை, குப்பநத்தம், அரசக்குழி, சாவடிக்குப்பம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடந்த ஏழு மாதங்களாக ஆற்று மணல் அள்ள அனுமதி இல்லாததால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதர நிலை பின்னுக்கு தள்ளபட்டு, அவர்களின் குடும்பங்கள் கடுமையான இன்னல்களை சந்தித்துகொண்டு இருக்கிறது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மணிமுத்தாற்றில் மணல் அள்ள அனுமதி தருமாறு ஊர்வலமாக சென்று கோட்டாசியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 - சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்