Published on 19/03/2019 | Edited on 19/03/2019
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழுவின் சார்பாக பொள்ளாச்சி வள்ளுவர் திடலில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியில் இளம் பெண்களை சீரழித்த பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/toGvyw2R4_FRDPTJ_yfR4d8bPexWdkrrBFKrVoWWX5o/1553011246/sites/default/files/inline-images/z18_0.jpg)
இந்த கொடூர சம்பவத்தை உலகுக்கு அம்பலப்படுத்திய நக்கீரன் ஆசிரியரை கைது செய்ய முயல்வதை வன்மையாக கண்டிப்பதோடு நக்கீரன் ஆசிரியர் வேதனையுடன் வெளியிட்ட தகவலை கவனத்தில் எடுத்து வெளியே உள்ள மொத்த குற்றவாளிகளையும் கைது செய்தி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/up5n2p-NDIRpiXnEd2Jb0lAK3q9UyDpGaDVlYKAgutc/1553011274/sites/default/files/inline-images/z19_3.jpg)
ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டரை்.