ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக கீழ்பவானி, காளிங்கராயன் மற்றும் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு மூன்று பிரதான வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பாசனம், கால்நடைகளுக்கு குடிநீர், பொதுமக்கள் பயன்பாடு என உள்ளது. இந்த வாய்க்கால்களில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என்று ஈரோடு மாவட்ட விவசாயிகள் போர் கொடி தூக்கியுள்ளார்கள்.
இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்த விவசாய சங்க பிரதிநிதிகள் விநாயகர் சிலைகளில் கொடிய கெமிக்கல் ரசாயண பூச்சு உள்ளது. இந்த சிலைகளை வாய்க்கால் நீரில் கரைத்தால் நீர் விஷத்தன்மையாக மாறும் ஆகவே இச்செயலை செய்யும் நபர்கள், அமைப்புகள், குறிப்பாக இந்து முன்னனியினர்களை கண்கானிக்க வேண்டும் மீறி சிலைகளை வாய்க்காலில் கரைத்தால் அவர்களே தண்ணீரை சுத்தப்படுத்துவதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றனர்.