Skip to main content

அரசு தடை உத்தரவை மீறி தீமிதி திருவிழா நடத்த முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு!!!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Villupuram - Temple - Function issue

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் திருமணம், இறப்பு உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கோவில் திருவிழாக்கள் அரசியல் கட்சி கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.


இப்படிப்பட்ட நிலையில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தில் மன்னாதீ ஈஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் கனகேசன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீஸார் அந்த ஊருக்கு சென்றனர்.

அங்கு ஊரடங்கு உத்தரவை மீறி கிராமத்து பெண்கள் பொங்கல் வைத்தும், தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்தும்கொண்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருவிழா நடத்த அனுமதிக்க முடியாது எனக்கூறி விழாவினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.  அதோடு ஊர் மக்களை கலைந்து போக செய்துள்ளனர். தீமிதிப்பதற்கான மரக்கட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. 

 

 


அவை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி தீமிதி திருவிழா நடத்துவதற்க்கு ஏற்பாடு செய்த வேலியம்பாக்கம் கிராம ஊர் நாட்டாமை திருமாவளவன், தர்மகர்த்தா கனகசபை, பூசாரி குமரகொடி மற்றும் ஊர் பொதுமக்கள் ரவி சிவகுரு, பாண்டுரங்கன் சுரேஷ் ஆகியோர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்