விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும், இவரது அண்ணன் ராஜேந்திரனுக்கும் பம்புசெட் மூலம் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே விரோதம் பற்றிக்கொண்டது.
இதற்கிடையில் 2015ஆம் ஆண்டு அண்ணன் ராஜேந்திரன் மீது இருந்த கோபத்தின் காரணமாக, அவரது பத்து வயது மகன் சந்தோஷை பாண்டியன் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் பாண்டியனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று பாண்டியனுக்கு சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.