விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிப் கோகன். இவரின் மகன் முஜப்பர்(22). சென்னை வேளச்சேரியில் உள்ள கணிணி கம்பெனியில் கடந்த 5 மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில் திடீர் என்று காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர், செஞ்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டு, கடந்த வாரம் புதுச்சேரி அருகில் உள்ள மதகடிப்பட்டுமணக்குள வினாயகர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்க்கொண்டார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நள்ளிரவு ஒருமணிக்கு இயற்கை எய்தினார்.
இறந்த முஜப்பரின் இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும். , ரிசல்ட் வந்த பின்பு தான் உடல் கொடுக்கப்படும் என அம்மருத்துவமனை தரப்பில் பெற்றோரிடம் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் இறந்த இளைஞர் முஜப்பர் பெற்றோர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் இளைஞர் உடலில் கொரோனா வைரஸ் தாக்கப்படவில்லை, வேறு விஷ ஜுரத்தினால் அந்த இளைஞர் இறந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அதை அடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக இளைஞர் இறந்துவிட்டதாக கூறி மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தீவிர மருத்துவ பரிசோதனை செய்யவும், அதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிர கண்காணிப்பில் இருக்குமாறு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கூட்டம் அதிகமான இடங்களில் மக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். ஒருவர் மூச்சுக்காற்று ஒருவர் சுவாசித்தவாறு நெருக்கமாக இருக்கவேண்டாம் என அறிவு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் கேட்டு பொதுமக்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர். வைரஸ் உலக நாட்டு மக்களை மிகவும் பயமுறுத்தி உள்ளது. பூகம்பத்தை விட இந்த வைரஸால் மக்கள் மிரண்டு போயுள்ளனர்.