Skip to main content

விவசாய நிலத்தில் சங்கராபுரம் என்கிற பெயரில் சொகுசுகுடில்; வாழ்வாதாரம் பறிபோவதாக பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

திருப்பனந்தாள் அருகே விளைநிலங்களை தரிசாக மாற்றுவதால் வாழ்வதாரம் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக அக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

 

Thanjavur

 

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள விவசாய உட்கிராமம் கூத்தனூர். அங்கு உக்கடை என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை சென்னையை சேர்ந்த சிலர் அடிமாட்டு விலைக்கு வாங்கி தரிசாக மாற்றி சங்கராபுரம் என்கிற பெயரில் சொகுசு குடில்கள் அமைத்துவருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியாளம், கூத்தனூர், உக்கடை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயத்தினக்கூலிகள்  "எங்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான், அதை திட்டமிட்டு அழித்துவிட்டு, இயற்கை கலந்த சொகுசு குடில்கள் அமைத்து எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர்" என்றுகூறி கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு கேட்டனர்.
 

அதற்கு "உக்கடை கிராமத்தில் சங்கராபுரம் என்னும் பெயரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கடந்த 5 வருடங்களாக குடியிருப்பு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது". என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

 

இந்தநிலையில் தான் பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அக்கிராம மக்களிடம் விசாரித்தோம், "ஏற்கனவே கதிராமங்கலத்தில் விளை நிலங்களை குறிவைத்து மீத்தேன் எடுக்க முயற்சிக்கிறாங்க. பாதிப்பு ஏற்படுத்திய ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
 

இந்தநிலமையில் அதே பகுதியில் உள்ள கொடியாளம், கூத்தனூர் , உக்கடை, ஆகிய கிராம மக்களுக்கு சங்காபுரம் திட்டம் என்கிற பெயரில் விளை நிலங்களை தரிசாக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. எங்க மக்களுக்கு விவசாய வேலையை தவிர வேறு தொழில் தெரியாது, தொழிலும் கிடையாது. எங்களை அப்புறப்படுத்த திட்டமிட்டுவிட்டனர்.
 

இங்குள்ள நத்தம், புறம்போக்கு பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாற்பது  ஆண்டுகளுக்கு மேலாக  இடம் நெருக்கடியில் இருக்கிறோம்.  எங்களுக்கு பட்டா கொடு என கொட்டகை அமைத்து எதிர்ப்பு தெரிவித்தோம், தகவல் அறிந்த கூத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் விவேக் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
 

அப்போது  கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு எங்களது வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துவிட்டது, வேலைவாய்ப்பு பறிபோகிறது, எனவே இங்குள்ள நத்தம், புறம்போக்கு பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தோம்.
 

 இதற்கிடையில் திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமாரும் வருவாய் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது பட்டாவில் வருகிறதா அல்லது  நத்தம் புற போக்கு பகுதியில் வருகிறதா என வருவாய் துறையின் ஆய்வுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
 

எங்களது கோரிக்கை  மூன்று கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு  வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் .இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மூன்று கிராம மக்களை திரட்டி, வருகிற பாரளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்