Skip to main content

தான் போட்ட மின்வேலியால் தன் உயிரையே இழந்த விவசாயி!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

Farmer incident in kanjipuram

 

விவசாய நிலத்தைச் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளைத் தடுப்பதற்காக போடப்பட்ட மின்வேலி, அதனை அமைத்த விவசாயியின் உயிரையே குடித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள களவரம்பூண்டி கிராமத்தில் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார் ராமசாமி என்ற விவசாயி. நிலக்கடலை விதைத்திருந்த ராமசாமி விளைநிலத்தைச் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளைத் தடுப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தண்ணீர் பாய்ச்ச சென்ற ராமசாமி தெரியாமல் கால் இடறி மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் என்பதால் சோலார் மின்வேலிகளை வேளாண்துறை அதிகாரிகள் பரிந்துரைத்து வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்