
உலகம் முழுவதும் மக்கள் தங்களின் தனித்திறமைகளை இணையத்தில் பல விதத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். முன்பு டிக் டாக், தற்போது ரீல்ஸ், யூட்யூப் என தங்களுக்குப் பிடித்த தளங்களில் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் உணவு சமைக்கும் குக்கிங் யூட்யூப் சேனல்கள் மிக அதிகம். அதில் மிகவும் பிரபலமானவர்கள் வில்லேஜ் குக்கிங் சேனல்.
5 பேர் கொண்ட இவர்களது சேனலுக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகம். அதிலும் அவர்கள் தமிழை பிரயோகிக்கும் முறை பலரது பாராட்டுகளைப் பெற்றது. ராகுல் காந்தி போன முறை தமிழகம் வந்த போது அவர்களுடன் சேர்ந்து சமையல் செய்தது அப்போது வைரலாகியது.
தமிழ் யூட்யூப் சமையல் சேனல்களில் முதல் முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் சேனல் என்ற பெருமையை தற்போது வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது. இந்நிலையில், அந்த சேனலை சேர்ந்த குழுவினர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் தந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் வெளியான சூழலில், அந்த சேனல் பெயர் ட்விட்டரிலும் ட்ரெண்ட் ஆனது.