


மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து, காவல் துறையினர் தாகுக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே சி.ஐ.டி.யு சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.
போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டப் பொருளாளர் குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.