பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை பகுதியில் மருதையாற்றில் நான்கு இளைஞர்கள் அந்த பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். மக்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத நீச்சல் தெரியாத 4 இளைஞர்கள் ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் தங்களின் சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்கள் நோக்கி வீசியுள்ளனர்.
அவர்களில் இருவர் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில், கார்த்திக், செந்தில் வேலன் ஆகிய இரு இளைஞர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இரண்டு இளைஞர்களை காப்பாற்றிய செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சரிடம் இவர்கள் இந்த விருதினை பெற்றனர்.
விருதினை பெற்று செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்களையும் ஆதனூர் கிராமத்தினர் வரவேற்ற மகிழ்ந்தனர். கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கிராம மக்கள் அப்போது கூறினர்.