Skip to main content

வீடு திரும்பினார் விஜயகாந்த்!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
வ்

 

இரண்டு நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்.

 

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயாகந்த், முதலில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.  இதன்பின்னர் சமீபத்தில் அவர் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.  மீண்டும் நான்கு மாதம் கழித்து அவர் அமெரிக்காவுக்கு மேல் சிகிச்சைக்கு செல்லவிருப்பதாகவும் தகவல். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவில் அவர் திடீரென்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து  பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில்,  விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று தேமுதிக தலைமை அறிவித்தது.   

 

இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் இன்று வீடு திரும்பினார்.  உணவுமுறை, உடற்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் விஜயகாந்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல். 

 

சார்ந்த செய்திகள்