உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பெரியகுளம் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே' என வசனங்களுடன் பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் பெரியகுளம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ளது.
இதில் தமிழக வெற்றிக் கழக பெரியகுளம் நகரத் தலைவர் தினேஷ், நகரச் செயலாளர் முகமது வாஜித், நகரத் துணைச் செயலாளர் முனிஸ் மற்றும் மற்றும் நிர்வாகிகள் அனைத்து பொதுமக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.