Skip to main content

திருச்சியில் இனிமேல் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை! ஏன் தெரியுமா ?

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

 

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் நாளை  வெளியாக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் படத்தை வெளியிடக் கூடாது என ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

 

v

 

திருச்சி மாவட்டத்தில் சக்திவேல் என்ற விநியோகஸ்தர்தான் கோமாளி படத்தையும் வெளியிடுகிறார். இவரின் உதவியுடன் ஜி.டி என்று அழைக்கப்படும் தியாகராஜன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை அவுட்ரேட் பேசி 3.40 கோடிக்கு வாங்கியிருக்கிறார். 

ஆனால் மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை அவர் ஈடு செய்ய வேண்டும் என கூறி திருச்சியைச் சேர்ந்த ஜி.டி என்று அழைக்கப்படும் தியாகராஜன் தலைமையில் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். நஷ்ட ஈடாக படத்தை கொடுக்க வேண்டும்.  இல்லை என்றால் கோமாளி படத்தை திருச்சி மாவட்டத்தில் திரையிட மாட்டோம் என்று கூறி, கோமாளி படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.

 

k


திருச்சி மாவட்டத்திற்கு  உட்பட்ட ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், வருகின்ற 15-ம் தேதி வெளியாக இருக்கின்ற "கோமாளி" திரைப்படத்தினை திருச்சி ஏரியாவில் வெளியிடமாட்டோம் என்று கூறியது சம்பந்தமாக இன்று தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது.    இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, சிங்காரவேலன், நித்தின் சத்யா, ஜே.எஸ்.கே சதீஸ்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்த பேச்சு வார்த்தையில்,  ஒரு திரைப்படத்தை அவுட்ரேட் பேசி எடுத்து விட்டால் அதிலிருந்து லாபமோ, நஷ்டமோ ஏற்பட்டால் அது யாரையும் கட்டுபடுத்தாது என்கிற விதிமுறை இருக்கும் போது, அவர் பேசிவிட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தற்போது பணம் கேட்டு மிரட்டுவது  மிகவும் கண்டிக்க தக்கது என்று பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. 

 

மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோமாளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,  திருச்சி மாவட்டத்தில் மட்டும் கோமாளி திரைப்படத்திற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. பணம் பாக்கி எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்கின்ற தன்னிடம் பணம் கேட்பது எந்த நியாயமும் இல்லை என்று கூறினார்.

 

ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் பணம் பறிக்க செய்கின்ற இந்த கட்ட பஞ்சாயத்துகளினால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் திருச்சி பிரான்சிஸ் ,மீனாட்சி சுந்தரம் ,ராதா, மீனா போன்றோர் மீது நாளை முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம் என்றார்கள். ஆனால் முதல்வரை சந்திக்க நேரம் கிடைக்காதால் இது சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் கடம்பூர் ராஜிடம் திரைப்படத்தின் உரிமையாளர்கள் மற்றும் தியாகராஜன் மீது புகார் கொடுத்தனர்.  அதன் அடிப்படையில் அமைச்சரின் செயலாளர் திருச்சி, மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு விசாரணை நடத்த சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள். 

 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பேசி சுமூகமாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடக்காத பட்சத்தில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தையும் திருச்சி ஏரியாவில் வெளியிடுவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்