சென்னை ஆவடியில் உள்ள சுந்தராஜப்பெருமாள் கோவிலில் கோசலை அமைக்கும் பணிகளுக்காக கோவில் நிலத்தை பார்வையிட தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இன்று சென்றிருந்தார். உடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்தனர். கோவிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை பார்வையிட்ட அமைச்சர், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்பொழுது கோவிலில் அர்ச்சனை செய்து கொண்டிருந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்தார். 'சாமி ஸ்கூல் எல்லாம் போறதில்லையா' என அமைச்சர் கேட்க, அந்த சிறுவன் 'எக்ஸாம் முடிஞ்சி லீவ் விட்டுவிட்டார்கள்' என்றான். 'உங்க பேரு என்ன' எனக் கேட்க, 'வேங்கட நரசிம்மன்' என்றான் சிறுவன். அதற்கு அமைச்சர் 'சாமி பேரை நீங்களே வச்சுக்கிட்டா எப்படி, சூப்பரா கட்டிருக்க வேஷ்டி' என சொல்ல சிறுவன் புன்னகைத்தான். இந்த காட்சிகள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.