Published on 10/10/2020 | Edited on 10/10/2020
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'நிதி பங்களிப்பு, 69% இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. கல்லூரி இணைப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணத்தைச் சேர்த்து ஆண்டுக்கு ரூபாய் 314 கோடி வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுக்கு ரூபாய் 1,570 கோடி வருவாய் ஈட்ட முடியும். தாமதிக்காமல் உடனடியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.