Skip to main content

"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்பது ஆணவத்தின் உச்சம்.." - வேல்முருகன் கண்டனம்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

ரத


தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என அண்மையில் வழக்கு ஒன்றில் நீதிபதி தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்த, அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும். அதேபோல் கருவிகளில் இசைக்கப்படாமல் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் எனப் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில், குடியரசு தினமான நேற்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி வங்கியின் மண்டல இயக்குநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தின விழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர். 

 

அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருமுகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்பது ஆணவத்தின் உச்சம். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று காலை 11 மணி அளிவில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முற்றுகையிடப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்