
வேலூர் மாவட்டத்தின் பிரபல ரவுடி வசூர்ராஜா. இவர் மீது பல அடிதடி வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் ராஜா மீது கொலை முயற்சி நடைபெற்றன. மற்றொரு ரவுடியான மகா என்கிற மகாலிங்கம் - ராஜாவுக்கும் இடையே வேலூர் மாநகரத்தில் இடையே மோதல் நடைபெற்றுவந்தன.
வசூர்ராஜாவுக்கு அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவி ஆதரவாக இருந்தார். மகாலிங்கத்தை கொலை செய்ய ராஜாவுக்கு பண உதவிகள் செய்தார் ஜி.ஜி.ரவி. இதில் கோபமான மகாலிங்கம் தலைமையிலான டீம் ரவியை கொலை செய்ய முயன்றது. அதில் தப்பினார் ரவி, கொலை செய்ய வந்து சிக்கிய மகாலிங்கத்தை நடுரோட்டில் வைத்து கற்கலால் தாக்கி கொலை செய்தனர் ரவியின் வாரிசுகள். அதற்கு பழிவாங்கும் விதமாக அந்த ரவியை மகாலிங்கம் நண்பன் குப்பன் தனது நண்பர்களோடு வந்து கொலை செய்தான்.
அதற்கு பழிவாங்க ரவுடி குப்பனை கொலை செய்ய ரவியின் சகோதரர் மற்றும் மகன்கள் சேர்ந்து சிறையில் இருந்த வசூர்ராஜாவை ஏற்பாடு செய்தனர். அதே நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசூர்ராஜா, பிணையில் மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்தான். வந்தவன் நீதிமன்றத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவானான். தலைமறைவானவன் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறான் என்கிற குற்றச்சாட்டு கிளம்பியது.
திடீரென கடந்த ஜீலை மாதம் 9-ந்தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வசூர்ராஜாவின் அம்மா, என் மகன் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன் என மனு தந்தார். இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 3ந்தேதி வேலூர் சத்துவாச்சாரி போலிஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் வந்த போலிஸார் கைது செய்தனர். என் மகன் திருந்தி வாழ்ந்து வருகிறான். அவனை போலிஸார் பிடித்து சென்றுள்ளார்கள் என அவனது அம்மா கலைச்செல்வி, கலெக்டரிடம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
என்ன வழக்கிற்காக கைது செய்தார்கள் என்பதை இதுவரை போலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை. இன்று இரவு வசூர்ராஜாவை நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள் என தெரிகிறது.