Skip to main content

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ரத்தா?:தேர்தல் ஆணைய செய்தித்தொடர்பாளர் விளக்கம்

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடித்து இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ரத்து என எந்தவித உத்தரவும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

election

 

வேலூரில் துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்த் கல்லூரி மற்றும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பணம் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

 

அதனையடுத்து வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் வேலூர் தொகுதி தேர்தல் ஆணைய செய்தித்தெடர்பாளர் ஷெய்பாலி சரண் அதுபோன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்